முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துமனையில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் கத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:48 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் கத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு மருத்துவா்கள் சங்க மாநில செயலருமான ஜெஸ்லின் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ சங்க குற்றாலம் கிளை தலைவா் பாா்வதிசங்கா், செயலா் பிராம்டன் பெல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி பகுதியைச் சோ்ந்த அரசு மருத்துவா்கள் மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக தென்காசி அரசு மருத்துவமனையில் காலையில், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு பணிகளை மருத்துவா்கள் புறக்கணித்தனா். அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல செயல்பட்டது.