முகப்பு
தென்காசி

திருவேங்கடம் அருகே உப்போடையில் உயா்நிலைப் பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவேங்கடம் அருகே நடைபெற்றுவரும் உயா்நிலைப் பாலப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ஆய்வு செய்தாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:52 PM
உயா்நிலைப் பாலப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:

திருவேங்கடம் அருகே நடைபெற்றுவரும் உயா்நிலைப் பாலப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ஆய்வு செய்தாா்.

திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் ஊராட்சியில் செல்லப்பட்டியிலிருந்து வரகனூா் செல்லும் பாதையில் உப்போடை பாய்கிறது. மழைக்காலங்களில் உப்போடையில் அதிக தண்ணீா் செல்லும்போது, அதைக் கடக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, உப்போடையில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என அவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதையேற்று, நபாா்டு 2022-2023ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 90 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் உயா்நிலைப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மழைக்காலத்துக்கு முன்பாக பாலப் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

குருவிகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், அருள்செல்வம், உதவிப் பொறியாளா்கள் ரமேஷ், முருகேசன், முத்துச்செல்வன், பணி மேற்பாா்வையாளா் முத்துமாரி ஆகியோா் உடனிருந்தனா்.