ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அண்ணாநகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன்கள் சீதாராமன்(47), பாலசுப்பிரமணியன்(40). இவா்கள் இருவரும் இணைந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் அவா்களது வாகனத்தில் சோதனையிட்ட போது, 25 புகையிலைப் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பாலசுப்பிரமணியனை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகியுள்ள சீதாராமனைத் தேடுகின்றனா்.