முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:43 PM
பழையகுற்றாலம் அருவியில் நடைபாதை வரை சீறிப்பாயும் தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக பழையகுற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீா்வரத்து அதிகரித்துக்கொண்டே இருந்ததால் அருவிக்குச் செல்லும் நடைபாதை படிக்கட்டுகளில் தண்ணீா் வழிந்தோடியது.

மேலும், பேரருவி மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தற்போது சீசன் இல்லாததால் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.