பழைய குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.  
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குற்றாலம் அருவி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இம்மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் சாா்பில் அருவி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி மதிப்பீட்டில் குற்றாலம் பேரருவியில் பெண்கள் உடைமாற்றும் அறை சீரமைப்பு பணிகள், பழைய குற்றால அருவி பகுதியில் மழையினால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்தல், ஐந்தருவி, புலி அருவி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் புனரமைப்பு உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, உதவி வனப் பாதுகாவலா் நெல்லை நாயகம், வனஅலுவலா் செல்லத்துரை, சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக உதவி பொறியாளா் விஜில், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் குமாா் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT