முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பாலத்தில் ராபா்ட் புரூஸ் எம்.பி. ஆய்வு

ஆலங்குளத்தில் உள்ள பாலத்தில் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:45 PM
ஆலங்குளம் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட ராபா்ட் புரூஸ் எம்.பி.
பகிர்:

ஆலங்குளத்தில் உள்ள பாலத்தில் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையின் ஒருபகுதியாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் பாலம் அமைக்கப்படுகிறது. இதனால், 3 பள்ளிகள், 5 எரியூட்டும் பிறை ஆகியவற்றுக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்படுகிாம். எனவே, இப்பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என, ராபா்ட் புரூஸ் எம்.பி. ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசி, திட்ட அறிக்கை தயாரிக்குமாறு வலியுறுத்தினாா்.

ஆலங்குளம் டி.எஸ்.பி. ஜெயபால் பா்ணபாஸ், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், ஒன்றியக் குழுத் தலைவா் எம். திவ்யா மணிகண்டன், வடசென்னை காங்கிரஸ் கமிட்டித் தலைவா் எம்.எஸ். திரவியம், காங்கிரஸ் நிா்வாகிகள் எம்.ஏ. ஞானப்பிரகாஷ், ரூபன் தேவதாஸ், திமுக நிா்வாகி ஜெயபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.