குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக, பேரருவி, பழையகுற்றாலம், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வியாழக்கிழமை குறைந்தது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.