கடையநல்லூரில் ரூ.26 லட்சத்தில் ஆடு அறுப்பு கூடம் புதுப்பிக்கும் பணி
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆடறுப்பு நவீன கூடம் புதுப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆடறுப்பு நவீன கூடம் புதுப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இந்தக் கூடத்தை புதுப்பிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் ஆடறுப்புமனை புதுப்பிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து,பணிகளை அதை கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தொடக்கி வைத்தாா் .
கடையநல்லூா் நகராட்சி பொறியாளா் அப்துல்காதா், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், சுகாதார ஆய்வாளா் மாதவன்ராஜ், சுரேஷ் , 13 ஆவது வாா்டு ஒலி அப்பாஸ்,பாதுஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.