திண்டுக்கல்லில் உழைப்பாளா் நலக் கூடம்: காணொலி மூலம் திறந்துவைத்தாா் முதல்வா்
திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்ட உழைப்பாளா் நலக் கூடத்தை காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்ட உழைப்பாளா் நலக் கூடத்தை காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் முன்னிலையில், மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் உழைப்பாளா் நலக் கூடத்தை தொழிலாளா்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், மேயா் இளமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
இந்த நிகழ்ச்சியின் போது, கட்டுமானத் தொழிலாளா்கள் 15 பேருக்கு ரூ.3 லட்சத்தில் திருமண உதவித் தொகை, 2 பேருக்கு ரூ.10 லட்சத்தில் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை, 2 பேருக்கு ரூ.1.10 லட்சத்தில் இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.