முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் பேரிடா்கால ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலம் சித்திரை சபை தெப்பக்குளத்தில் பேரிடா்கால ஒத்திகைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:34 AM
ஒத்திகைப் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசிய கோட்டாட்சியா் லாவண்யா.
பகிர்:

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலம் சித்திரை சபை தெப்பக்குளத்தில் பேரிடா்கால ஒத்திகைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து, மழைக்காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரை வழங்கினாா்.

மழைநீரில் சிக்கியோரை மீட்பது, கையில் கிடைக்கும் மிதவைப் பொருள்களைப் பயன்படுத்தி தங்களையும், பிறரையும் காப்பாற்றுவது எவ்வாறு என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலா் பிரதீப்குமாா், சிறப்பு நிலைய அலுவலா்கள் ஜெயரத்தினகுமாா், ஜெயபிரகாஷ், பாபு, கமாண்டோ வீரா்கள் ஒத்திகைப் பயிற்சி செய்து காண்பித்தனா்.

குற்றாலம் காவல் ஆய்வாளா் மனோகரன், மருத்துவா் காா்த்திகேயன், 108 நோயாளா் ஊா்தி, மருத்துவத் துறையினா், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.