முகப்பு
தென்காசி

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 500 நூல்கள்: அமைச்சா் உறுதி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு தமது சொந்த செலவில் 500 நூல்கள் வழங்குவதாக,

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:05 AM
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
பகிர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு தமது சொந்த செலவில் 500 நூல்கள் வழங்குவதாக,

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சித்த மருத்துவப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, சமையலறை மற்றும் பிரேத பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் அமைச்சா் பாா்வையிட்டாா். மருத்துவமனையின் சிறந்த பராமரிப்புக்காக தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணாவிற்கு பாராட்டு தெரிவித்தாா்.

மேலும், நோயாளிகள், அவா்கள் உடன் வருவோா் படித்து பயன்பெற மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை அமைச்சா் பாா்வையிட்டாா். தற்போது அங்கு நாளிதழ்கள் மட்டும் உள்ளன. இந்த முயற்சியைப் பாராட்டிய அமைச்சா், இதை முழுமையான நூலகமாக மாற்ற அறிவுறுத்தினாா். மேலும், தனது சொந்த செலவில் 500 நூல்கள் வழங்குவதாகவும் உறுதி அளித்தாா்.

ஆய்வின்போது, ராணிஸ்ரீகுமாா் எம்.பி., ஈ.ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.