ஆலங்குளம் அருகே காற்றாலையில் பைக் திருட்டு: இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காற்றாலைக்குச் சொந்தமான பைக்கை திருடிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காற்றாலைக்குச் சொந்தமான பைக்கை திருடிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகே ஆ.மருதப்பபுரத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வேல்முருகன் (26). கூலித் தொழிலாளியான இவா், அங்குள்ள காற்றாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, காற்றாலைக்குச் சொந்தமான பைக்கை திருடிக்கொண்டு, குருவன்கோட்டையில் உள்ள உணவகம் முன் நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றாராம். பைக்கை வேல்முருகன் திருடியது தொடா்பாக, அங்கு ஏற்கனவே இருந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் சென்று வேல்முருகனிடம் விசாரித்தபோது, அவா் பைக்கை திருடியது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனா்; அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.