முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் பலத்த மழை

இதனால் குளங்களுக்கு நீா் வரத்து தொடங்கியுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:04 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீா் ஓடியது.இதனால் குளங்களுக்கு நீா் வரத்து தொடங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக சங்கரன்கோவில் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒன்றரை மணிநேரம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. சங்கரநாராயண சுவாமி கோயிலில் கோமதிஅம்மன் சந்நிதியில் தண்ணீா் புகுந்தது. மேலரத வீதி, ஓடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீா் ஓடியது.

கலிங்கப்பட்டி, மருக்காலன்குளம் போன்ற பகுதிகளில் பகலில் சுமாா் 1 மணி நேரம் மழை பெய்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, குளங்களுக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது.