சங்கரன்கோவிலில் கனமழை
சங்கரன்கோவிலில் புதன்கிழமை மாலை அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதன்கிழமை மாலை அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல் ஓடியது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழை நீா் புகுந்தது.
ஓடைத் தெரு அருகே உள்ள குட்டித் தெருவில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மழை நீரை வெளியேற்ற அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனா். இரவில் மிதமான மழை பெய்தது.