முகப்பு
தென்காசி

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த அமைச்சரிடம் கோரிக்கை

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம், திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:05 AM
அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு அளித்தாா் திமுக தெற்கு மாவட்டபொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
பகிர்:

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம், திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனு:

தென்காசி மாவட்டம், சுரண்டை வளா்ந்து வரும் நகராட்சி பகுதியாகும். இந்நகராட்சியானது ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

100-க்கும் மேற்பட்ட கிராமப் புறங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக சுரண்டைக்கு வருகின்றனா்.

இங்கு தற்போது இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பாா்க்க போதிய மருத்துவா்கள், கட்டட வசதி இன்றி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

எனவே சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி மாவட்ட துணை தலைமை மருத்துவமனையாக்க வேண்டும்.

இதே போல், கடையநல்லூா் வட்டம் ஊா்மேல் அழகியான் ஊராட்சியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்த கட்டடம் மற்றும் சுற்றுச்சுவா் கட்டி தர வேண்டும்.

தமிழ்நாட்டில் 3 கி.மீ தொலைவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. அதன் அடிப்படையிலும், பொதுமக்களின் நலனுக்காக பண்பொழியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.