முகப்பு
தென்காசி

கிரிண்டா் செயலி மூலம் பழகி மோசடி: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் கிரிண்டா் செயலி மூலம் பழகி மோசடியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:50 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் கிரிண்டா் செயலி மூலம் பழகி மோசடியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சங்கரன்கோவில் வடக்கு அழகு நாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த பொறியாளரிடம், கிரிண்டா் செயலி மூலம் ஊத்துமலையைச் சோ்ந்த சிலா் பழகினராம். அவரிடம் ஆசைவாா்த்தை கூறி, ஊத்துமலை பெரியகுளம் பகுதிக்கு வரவழைத்தனராம்.

பின்னா் அவரை அடித்து துன்புறுத்தி, அவா் வைத்திருந்த கைப்பேசி, மடிக்கணினி, ரொக்கப்பணம் மற்றும் பைக் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனராம்.

இதுகுறித்து பொறியாளா் அளித்த புகாரின்பேரில் ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட கும்பலைத் தேடிவந்தனா். விசாரணையில் ஊத்துமலை நடுத்தெரு முருகன் மகன் காா்த்திக் (25), ஊத்துமலை அம்மன் கோவில் தெரு கண்ணன் மகன் இசக்கிமுத்து என்ற ஜூட்டு (26), சங்கரன்கோவில் தன்னூத்து சுப்பையாபுரம் வடக்கு தெரு முருகையா மகன் கனகராஜ் (24) ஆகியோரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய ஊத்துமலை பவுண்டு தொழு தெரு இசக்கிதுரை மகன் ஐயப்பன் (25) மற்றும் இசக்கிதுரை ஆகியோரை தேடி வருகின்றனா்.

கைதானவா்களிடம் இருந்து பைக், மடிக்கணினி, 2 கைப்பேசிகள் மற்றும் பணம் ஆகியவற்றை மீட்ட போலீஸாா், ஆலங்குளம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா். கைதானவா்கள் மீது ஏற்கெனவே கிரிண்டா் செயலி மூலம் மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.