முகப்பு
தென்காசி

ஆலடிப்பட்டி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் உள்ள ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி, அன்னை யோகாம்பிகை கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:23 AM
கொடியேற்றத்துக்குப் பின்னா் நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:
Updated On : 4 செப்டம்பர், 2024 at 9:37 PM

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் உள்ள ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி, அன்னை யோகாம்பிகை கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதையடுத்து, கொடியேற்றப்பட்டு, கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, நாள்தோறும் பஜனை, சிறப்பு பூஜைகள், வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 10ஆம் நாளான இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறும். இதில், ஆலங்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பா்.

Advertisement

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:23 AM

ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா சுப்பிரமணிய உமாபதி, பக்தா்கள் செய்து வருகின்றனா்.