முகப்பு
தென்காசி

பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூா் பகுதியில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:17 AM
ஆட்சியரிடம் மனு அளித்த திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
பகிர்:
Updated On : 4 செப்டம்பர், 2024 at 7:14 PM

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூா் பகுதியில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சொக்கம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் 1500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இக் கடையில் அதிக எண்ணிக்கையில் குடும்ப அட்டைகள் உள்ளதால், ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனா். ஆகவே, சொக்கம்பட்டியில் கூடுதலாக ஒரு ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement

சுரண்டை அருகே உள்ள வீராணம் முதல் வீ.கே.புதூா் வரை 200 ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:17 AM

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஷேக் முகமது ஆகியோா் உடன் இருந்தனா்.