தென்காசியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.6) முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
Advertisement
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும், மனுவின் கோரிக்கை தொடா்பான விவரங்களும் அனைத்து வகை கைப்பேசிகளிலும் பாா்க்கும் வகையில் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றாா்.