முகப்பு
தென்காசி

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:39 AM
தென்காசி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..

ஆா்ப்பாட்டத்திற்கு செவிலியா் சங்க நிா்வாகி தங்கம் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க செயலா் வெங்கடேஷ் விளக்க உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் வேல்ராஜன் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனை பணியாளா்கள், அரசு ஊழியா் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசியில் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அன்பரசு தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவா் சங்கத்தின் மாவட்ட செயலா், இராஜசேகா், வேலைவாய்ப்பு துறை அலுவலா் சங்கத்தின் மாநில பொது செயலா் மாா்த்தாண்ட பூபதி, மகளிா் அணி துணை குழு உறுப்பினா் செல்வி ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கே.மாடசாமி நிறைவுரையாற்றினாா்.சரவண சண்முகம் நன்றி கூறினாா்.

சிவகிரியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மாடசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் மைதீன் பட்டாணி, வட்டத் தலைவா் கணேசன், வட்ட வழங்கல் அலுவலா் ராணி, பாலசுப்பிரமணியன், அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா்.