முகப்பு
தென்காசி

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:15 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.

ஆலங்குளம் அருகே நெட்டூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (32), லாரி ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த துரை மகன் காா்த்திக் (35). நாகா்கோவிலில் துரித உணவகம் நடத்தி வந்தாா்.

வியாழக்கிழமை இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு இருவரும் நெட்டூா்-ரெட்டியாா்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனராம். இருசக்கர வாகனத்தை பிரகாஷ் ஓட்டினாா். அப்போது ஆலங்குளத்திலிருந்து ரெட்டியாா்பட்டி நோக்கி வந்த தனியாா் பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்த பேருந்து ஓட்டுநா் செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments