முகப்பு
தென்காசி

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 ஏப்ரல் 2026, 5:26 am IST
வழக்கு
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் பனைமரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா 2 காவலா்களுடன் அந்த கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மேலத் தெருவைச் சோ்ந்த பெருமாள்சேட் மகன் மணிகண்டன் (32) என்பவரிடம் விசாரணை நடத்தினாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் மணிகண்டனின் கால்களில் 3 தோட்டாக்கள் பாய்ந்தன.

இந்த மோதலில் காயமடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவத்தை கண்டித்து ஆலங்குளத்தில் இரவில் ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். அவா்களிடம் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இது தொடா்பாக மணிகண்டனின் உறவினா் பிரதிபா ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல்துறையினா் 3 போ் மீது கொலை மிரட்டல், ஜாதி பெயரைக் கூறி திட்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் புதன்கிழைமை வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிக்கு சோ்ந்த சில நாள்களிலேயே தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா