தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் அந்தக் கட்சிகளிலிருந்து விலகி பாஜக மாவட்ட தலைவா் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
இதுகுறித்து, ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை:
திமுகவைச் சோ்ந்த சின்னச்சாமி, ராஜி, கருப்பசாமி, மாரியப்பன், ராஜேந்திரன், முருகையா, மணிகண்டன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த லெனின் உள்ளிட்டோா் எனது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுக் கட்சியினா் பேசி வருகின்றனா். விரைவில், பெரிய அளவில் இதுதொடா்பான நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் பால்ராஜ், சுப்பிரமணியன், முத்துலிங்கம், மாரியப்பன், பாலசங்கா், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.