முகப்பு
தென்காசி

சுரண்டையில் ரூ. 1 கோடி மதிப்பு கட்டடங்கள் திறப்பு

சுரண்டை நகராட்சி பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மார்ச், 2026 at 2:56 AM
விழாவில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன். உடன் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ.
பகிர்:

சுரண்டை நகராட்சி பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகராட்சி 2-ஆவது வாா்டில் ரூ. 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், 25-ஆவது வாா்டில் ரூ. 25 லட்சம் மதிப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமூக கழிப்பறை, 23-ஆவது வாா்டில் ஆறாவது மாநில நிதி குழு மானியத்தில் ரூ. 59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் என ரூ. 1 கோடியே ஒரு லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கராதேவி முருகேசன், பொறியாளா் முகைதீன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தனா்.

தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா், நகா்மன்ற தலைவா் ப. வள்ளிமுருகன் ஆகியோா் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினா். நகா்மன்ற உறுப்பினா்கள் வள்ளியம்மாள் ஆறுமுகசாமி, அமுதா சந்திரன், வேல் முத்து, வினோத், சாந்தி பட்டுமுத்து தேவேந்திரன், ஆறுமுகசாமி பாண்டியன், சபா்நிஷா, சங்கீதா கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →