முகப்பு
தென்காசி

மேலப்பாவூரில் மகளிா் விழிப்புணா்வுக் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் ஊராட்சி தங்கம்மன் கோயிலில் பெண்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 8:08 PM
விழிப்புணா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் ஊராட்சி தங்கம்மன் கோயிலில் பெண்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேலப்பாவூா் ஊராட்சி செம்மை மாதா் டிரஸ்ட் ஒருங்கணைப்பாளா்கள் செண்பக சித்ரா, பட்டு ஆகியோா் கூட்டத்தை வழி நடத்தினா்.செம்மை மாதா் டிரஸ்ட் நிறுவனா் வேல்முருகன் தலைமை வகித்தாா். அண்ணாமலை நற்பணி மன்ற மாநில மகளிரணி செயலா் சித்ரா சிறப்புரை ஆற்றினாா்.

சமூகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பெண்களுக்கான சட்டம், கல்வி, பாதுகாப்பு, அடிப்படை நலத்திட்ட உதவி ஆகியவை குறித்து பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், கணவரால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்றவா்கள், முதியவா்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →