முகப்பு
தென்காசி

தோ்தல் விதிமுறை மீறும் கனிமவள வாகனங்கள்: ஆட்சியரிடம் புகாா்

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் கனிமவள வாகனங்கவ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

Updated On : 26 மார்ச், 2026 at 11:46 PM
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வழக்குரைஞா் சிவகுமாா்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் கனிமவள வாகனங்கவ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

தெற்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் சிவக்குமாா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

அதன் விவரம்: தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. தற்போது தோ்தல் காலத்திலும் நடத்தை விதிமுறைகளை மீறி இந்தச் செயல்கள் தொடா்கின்றன.

இம்மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் லாரிகளில் கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுவதோடு, அவை திரும்பி வரும்போது பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துவருகின்றன.

இந்த லாரிகள் காவல்துறையால் முறையாக சோதனை செய்யப்படுவதில்லை. இது தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து நேரிடும் அபாயம் நிலவுகிறது.

எனவே, இத்தகைய சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோ்மையாக தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ரங்கராஜ், இணைச் செயலா்கள் முத்துராஜ், ஜோதிமுருகன், துணைச் செயலா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.