முகப்பு
தென்காசி

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் குவிக்கப்பட்ட குப்பைகளால் சுகாதார சீா்கேடு

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 26 மார்ச், 2026 at 12:25 AM
ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களால் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள்.
பகிர்:

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமாா் 150 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் காய்கனிக் கழிவுகள், குப்பைகள் பேரூராட்சி ஊழியா்களால் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை வளம் மீட்புப் பூங்காவிற்குக் கொண்டு சென்று உரம் தயாரித்தல், மறு சுழற்சி ஆகியற்றை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக இக்குப்பைகள், காய்கனிச் சந்தை வளாகத்தில் உள்ள பயன்பாடின்றி உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சேகரித்து வைத்துள்ளனா். இதன் துா்நாற்றம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் வரை செல்வதால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து, தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பேரூராட்சி அலுவலகத்தை இந்தக் கட்டடத்தில் செயல்பட செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.