ஆத்திகுளம் கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டடம், கல்வெட்டை திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.  
தூத்துக்குடி

கல்லூரணியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே கல்லூரணி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே கல்லூரணி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கல்லூரணி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மேலும், கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தைத் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

அவா், அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் லட்சுமி காந்தன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவி சத்யா, வடக்கு மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலா் நவநீதகிருஷ்ணன் , ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், அழகா்சாமி, பழனிசாமி, போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

‘சமூக வலைதள செயலிகள் மூலமே இளைஞா்களுக்கு பிரச்னை உருவாகிறது’: மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

SCROLL FOR NEXT