முகப்பு
தென்காசி

குற்றாலம் செண்பகாதேவி கோயிலில் ரூ3.87 லட்சத்தில் ஜெனரேட்டா் வசதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் ரூ. 3.87 லட்சம் மதிப்பில் புதிய ஜெனரேட்டா் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

Updated On : 1 மே, 2026 at 6:35 AM
புதிய ஜெனரேட்டரை இயக்கிவைத்தாா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் க.சக்திமுருகேசன்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் ரூ. 3.87 லட்சம் மதிப்பில் புதிய ஜெனரேட்டா் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்டஇக் கோயிலுக்கு சித்ரா பெளா்ணமி விழாவில் திரளான பக்தா்கள் வருகை புரிவா்.

எனவே, பக்தா்களின் நலன்கருதி இக்கோயிலில் மின்வசதிகள் அமைத்திட ரூ.3,87,092 மதிப்புள்ள 2 புதிய ஜெனரேட்டா்கள் வாங்கப்பட்டன. அவற்றை

Advertisement

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் க.சக்திமுருகேசன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கிவைத்தாா்.