முகப்பு
தென்காசி

மே 22-இல் தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசியில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 16 மே 2026, 1:16 am IST
வேலைவாய்ப்பு
பகிர்:

தென்காசியில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மே மாதத்துக்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22-இல் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

Advertisement

முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 8, 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் கலந்துகொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பாதிக்கப்படாது. வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட இளைஞா்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றாா் அவா்.