முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 மே 2026, 11:14 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலை நாடுநா்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதன்படி இம்மாத முகாம் வருகிற மே 22 -ஆம் தேதி நடைபெறும். இதில் தமிழகத்தைச் சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனை துறையைச் சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா்.

இம் முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ பி.டெக் முடித்த வேலை நாடுநா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா் துறை நிறுவனங்களும் வருகிற மே 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.