முகப்பு
திருநெல்வேலி

ராம நதி, கடனா நதி அணைகள் இன்று திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் 14,867 ஏக்கர் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை பிசானப் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பிசானப் பருவ சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கு வசதியாக அணைகளில் இருந்து தண்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் 14,867 ஏக்கர் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை பிசானப் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
 பிசானப் பருவ சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கு வசதியாக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 அணைகளின் நீர்மட்டம்  பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 509.61 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக 304.75 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 255 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் பெருங்கால் மதகில் 30 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
 பாசனத்துக்காகத் தண்ணீர் திறப்பு÷இதனிடையே கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசானப் பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதேபோல் ராமநதி அணையில் ராமநதி வடகால், தென்கால், பாப்பான்கால், புதுக்கால் ஆகிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் 4943.51 ஏக்கர் நிலங்களுக்கு 143 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 பாபநாசம் அணை திறக்கப்படுமா? பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கால்வாய்கள் மூலம் 40,000 ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
 பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீóர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 75.50 அடியாக இருந்தது.
 அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ஒருசில நாள்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →