அக். 5-ல் தி.மு.க. மனித சங்கிலி: கட்சியினருக்கு அழைப்பு
அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து
அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. சார்பில் வரும் 5-ம் தேதி பாளையங்கோட்டையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாவட்ட செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் 1.10.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. செற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்
அடிப்படையில் எல்லா வகையிலும் செயலிழந்து விட்ட அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. சார்பில் அக். 5 அன்று மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் இருந்து சமாதானபுரம் சாலை வரை, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. சார்பில் கறுப்பு உடை அணிந்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அறவழியில் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள், கட்சி சார்ந்த பிற அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் கறுப்புச்சட்டை, கறுப்பு வேட்டி அணிந்து பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.