பண்பொழி திருமலைக்கோவிலில் தேரோட்டம்:ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த நேற்றுவெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்றைய தினம் மலைக்கோவிலிலிருந்து,பண்பொழிக்கு சிறப்பு அலங்காரத்துடன் குமரனை வழி அனுப்பும் வைபவமும்,மாலையில் பண்பொழி ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி உபசார அழைப்பு வைபவமும் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய
கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த நேற்றுவெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்றைய தினம் மலைக்கோவிலிலிருந்து,பண்பொழிக்கு சிறப்பு அலங்காரத்துடன் குமரனை வழி அனுப்பும் வைபவமும்,மாலையில் பண்பொழி ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி உபசார அழைப்பு வைபவமும் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான அன்னக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஜன.19-ம் தேதி காலையில் சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வீதியுலாவும்,இரவில் கலைமான் வாகன உலாவும்,20-ம் தேதி காலை வெள்ளிச்சப்பர வீதியுலாவும்,இரவில் கோரத வீதியுலாவும், 21-ம் தேதி காலை சிம்ம வாகன வீதியுலாவும்,இரவில் ஆட்டுகிடா வாகனத்தில் வீதியுலாவும், 22-ம் தேதி காலையில் சட்டத்தேரில் வீதியுலாவும்,இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலாவும், 23-ம் தேதி காலையில் வெள்ளிச்சப்பரத்தில் வீதியுலாவும்,ஜன.24-ம் தேதி காலையில் கோரதத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
அன்று காலை ஐந்துபுளி மண்டபத்தில் சண்முகர் அழைப்பு உபசாரமும்,பிற்பகல் முருகன்-சண்முகர் எதிர்சேவையும் இரவில் இரட்டைச்சப்பரத்தில் வீதியுலாவும், 25-ம் தேதி காலையில் வெள்ளைச்சாத்தி வைபவமும்,மதியம் பச்சை சாத்தி வைபவமும்,இரவில் கைலாச பர்வதத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.