முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுஷ்டிப்பு

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அலுவலகம் முன் உள்ள இந்திராகாந்தி

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அலுவலகம் முன் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட தலைவர் கே. ராம்நாத், பொதுச் செயலர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்பி ராமசுப்பி, முன்னாள் எம்எல்ஏ வேல்துரை, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் உள்ள இந்திராகாந்தி உருவப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஐஎன்டியூசி அலுவலகத்தில் மாநிலச் செயலர் பி. ஆவுடையப்பன் தலைமையில், நினைவு நாள் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கெளரவத் தலைவர் சுடலைமுத்து முன்னிலை வகித்தார். இந்திராகாந்தி படத்துக்கு, கட்சியின் மூத்த நிர்வாகி எஸ். செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட துணிச்சல் நடவடிக்கைகள் குறித்து நினைவு கூர்ந்து பேசினர்.

பக்தவச்சலம் அறக்கட்டளை செயலர் சண்முகவேலன், ஐஎன்டியூசி ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் ராமன், சங்கத்தலைவர் பொன்னையா, பொதுச் செயலர் கண்ணன், பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.