திருநெல்வேலி

ரூ.2.38 கோடியில் ஆடு, மாடுகள்: 2,131 பயனாளிகள் தேர்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த இரு மாதங்களில் 2,131 பயனாளிகளை தேர்வு செய்து ரூ.2.38 கோடி மதிப்பில் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக கிராம நிலைக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் 34 ஊராட்சிகளில் செம்மறி ஆடுகள், கறவை பசுக்கள் வழங்கும் பணி நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் 19 ஊராட்சிகளிலும் பயனாளிகளை தேர்வு செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 50 கறவை பசுக்களும், 1024 பேருக்கு தலா 4 ஆடுகளும் வழங்கப்படும். அக்டோபர் மாதத்தில் 50 பேருக்கு கறவை பசுக்களும், 1007 நபர்களுக்கு தலா 4 ஆடுகளும் வழங்கப்படும். இதற்காக மாடுகள் கொள்முதல் செய்ய ரூ.35 லட்சம், ஆடுகள் கொள்முதல் செய்ய ரூ.2.03 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தப் பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், கிராம நிலைக் குழு உறுப்பினர்கள் ஒளிவுமறைவின்றி செய்ய வேண்டும். அரசு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தேர்வு வெளிப்படைத் தன்மையாக நடைபெற வேண்டும் என்றார் ஆட்சியர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT