முகப்பு
திருநெல்வேலி

திடக்கழிவு மேலாண்மை வரியை  ரத்து செய்யக் கோரி முற்றுகை

திடக்கழிவு மேலாண்மை வரியை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திடக்கழிவு மேலாண்மை வரியை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி  மாநகராட்சி புதிதாக திடக்கழிவு மேலாண்மை வரி விதிப்பதாகவும்,  அதை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலர் பாஸ்கரன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை  முற்றுகையிட்டனர். 
போராட்டக் குழுவினரிடம் மனு வாங்க,  மாநகராட்சி ஆணையர்  உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லாததால்,  போராட்டக் குழுவினர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.  அதன்பிறகு மாநகராட்சி கணக்கு இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. 
இந்த முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் சுடலைராஜ்,  செயற்குழு உறுப்பினர்கள் பழனி,  மோகன்,  ஸ்ரீராம்,  பாளையங்கோட்டை  மற்றும் தியாகராஜ நகர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →