திருநெல்வேலி

முன்னீர்பள்ளத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு: மக்கள் அவதி

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீர்பள்ளத்தில் நிலவி வரும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி அருகேயுள்ள கீழமுன்னீர்பள்ளம் பகுதி மக்கள் அளித்த மனு: முன்னீர்பள்ளம் ஊராட்சியின் கீழ் உள்ள தனலட்சுமிநகர், பாலாஜிநகர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தாமிரவருணி குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. ஒரேயொரு ஆழ்துளைக் கிணறு மட்டுமே உள்ளது. அதிலும் கடந்த சில வாரங்களாக தண்ணீர் வரவில்லை. தெருவிளக்கு, கழிவுநீர்ஓடை போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே மனு அளித்ததற்கு ஊராட்சியில் விசாரித்து அளிக்கப்பட்டுள்ள பதிலில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆட்சியர் நேரில் விசாரித்து குடிநீர் விநியோகம் சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT