திருநெல்வேலி

பாடப்புத்தகங்களை பள்ளிகளில் நேரடியாக வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

DIN

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நான்குனேரியில் நடைபெற்ற அமைப்பின் வட்டாரக் கிளை செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் தலைவர் பொ. செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், துணைத் தலைவர் பரமசிவன், நிர்வாகிகள் வில்சன், மரியதாஸ், முருகேசன், மெர்லி நல்லகுமார், வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இருவர் பள்ளிக்கு செல்லாமலேயே, நான்குனேரி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களை பள்ளி அல்லாத பணிகளுக்கு ஈடுபடுத்துவதில்லை என எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட தலைமையாசிரியர்களை அலுவலகப் பணியிலிருந்து விடுவித்து பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நிகழ் கல்வியாண்டில் 2ஆம் பருவத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகளை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கவில்லை.
இது அரசாணைக்கு மாறானது. எனவே, வருகிற 3ஆவது பருவத்துக்கான விலையில்லா பொருள்கள் அனைத்தையும் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT