திருநெல்வேலி

பாலியல் தொந்தரவு புகார்: பள்ளித் தலைமையாசிரியர் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பள்ளிச் செயலர், தமிழாசிரியர்ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ஒரு பள்ளியில் தாற்காலிக தமிழாசிரியராக திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜு ஞானம் (35) பணிபுரிந்து வந்தார். இலஞ்சியில் வசித்து வந்த அவர், மாணவர், மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறப்பு வகுப்புக்கு கடந்த புதன்கிழமை வந்த மாணவிக்கு இவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாழக்கிழமை பள்ளியில் சக மாணவிகளிடம் தெரிவித்த அந்த மாணவி, தலைமையாசிரியரிடமும் புகார் செய்தாராம். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர், மாணவிகள் மாலையில் வகுப்புகள் முடிவடைந்தவுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த குற்றாலம் காவல் ஆய்வாளர் ஜானகி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தார். மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் ஆறுமுகத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் பாலியல் தொந்தரவு குறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, தலைமையாசிரியரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், இதுதொடர்பாக பள்ளியின் செயலர் சண்முகம், தமிழாசிரியர் ராஜு ஞானம் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.
இதனிடையே பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT