திருநெல்வேலி

வள்ளியூர் முருகன் கோயில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

DIN

வள்ளியூர் அருள்மிகு முருகன் கோயில் தெப்பக்குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
வள்ளியூர் முருகன் கோயில், தென்மாவட்டங்களில் உள்ள குகைக் கோயில்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இந்த கோயிலின் முன்பகுதியில் தெப்பக்குளமும்,  மையப்பகுதியில் மண்டபமும் அமைந்துள்ளது.
இந்த தெப்பக்குளத்துக்கு வள்ளியூர் பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் வருவதற்கு கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் முருகன் கோயில் தெப்பக்குளம் வறண்டு காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வள்ளியூர் முருகன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெப்பக்குளத்தை தூர்வார முடிவு செய்து,  நிதி திரட்டி பணியைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT