முகப்பு
திருநெல்வேலி

ஆலங்குளம் அருகே பெண் கொலையில் மனைவி கைது; கணவர் சரண்

ஆலங்குளம் அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர்

திருநெல்வேலி

ஆலங்குளம் அருகே பெண் கொலையில் மனைவி கைது; கணவர் சரண்

ஆலங்குளம் அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள சீதபற்பநல்லூர் போலீஸ் சரகம் வல்லவன்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி குழந்தை திரவியத்தம்மாள்(40).  கணவனை இழந்த இவர் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர், அதே பகுதி நடுத்தெருவில் வசிக்கும் காசி மகன் சுப்பிரமணியனுக்கு (37) அவ்வப்போது பணம் கொடுத்து வந்தாராம். இந்நிலையில் அவர் சுப்பிரமணியனிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு வந்தாராம்.
இதனால் சுப்பிரமணியனின் மனைவி சுப்புலட்சுமி(35)-க்கும் குழந்தை திரவியத்தமாளுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.இந்நிலையில் வியாழக்கிழமை, சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்று குழந்தை திரவியத்தம்மாள் பணத்தைக் கேட்ட போது அவரை சுப்பிரமணியன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சீதபற்பநல்லூர் போலீஸார்  சுப்பிரமணியன் மனைவி சுப்புலட்சுமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுப்பிரமணியன் திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →