திருநெல்வேலி

அசல் ஓட்டுநர் உரிமம்: நாளை சிஐடியூ ஆர்ப்பாட்டம்

DIN

அசல் ஓட்டுநர் உரிமம் சட்டத்தை கைவிட வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடங்களில் வரும் 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ செயலர் ஆர். மோகன் வெளியிட்ட அறிக்கை:
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் அளவை குறைக்கக் கூடாது.
விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும். பொதுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பாரம்பரிய மீன்பிடிக்கும் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (செப்.25) காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT