முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 37 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி 37 டாஸ்மாக் மதுக்கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி 37 டாஸ்மாக் மதுக்கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. 
உச்சநீதிமன்றம் கடந்த 2017இல் பிறப்பித்த உத்தரவின்படி, நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.  மேலும், நகர்ப்பகுதிக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை அனுமதிக்கலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக மாற்றப்படாமலேயே மதுக்கடைகள் திறக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்த உத்தரவின்பேரில், நெடுஞ்சாலை எல்லைக்குள் இயங்கி வந்த கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, மாநகரில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டத்தில் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் 19 கடைகளும், நகராட்சிப் பகுதியில் 9 கடைகளும், பேரூராட்சிப் பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்து 220 மீட்டர் தொலைவுக்குள் 9 கடைகளும் இயங்கி வந்தது தெரியவந்தது. இந்த 37 மதுக்கடைகளும், அக்கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்து மதுக்கூடங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டன. இந்தக் கடைகளில் இருப்பு வைத்திருந்த மதுபாட்டில்களை பிற கடைகளுக்கு  மாற்றவும், அங்கு பணி செய்து வந்த மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்ளிட்ட 250 பணியாளர்களுக்கு வேறு இடத்தில் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →