மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு மாலை அணிவிப்பு
சங்கரன்கோவில் அருகேயுள்ள சங்க காலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள சங்க காலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனின் 127ஆவது பிறந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து, அவர்களை சிறப்பிக்கும் வகையில் விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சங்கரன்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள சங்க காலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவுத் தூணுக்கு, தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தென்காசி எம்.பி. வசந்திமுருகேசன்,காவல்துறை ஆணையர் முத்துச்சாமி, தமிழ் வளர்ச்சித் துறை மண்டல இயக்குநர் பசும்பொன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.