முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி புஷ்கர விழா அறிமுகக் கூட்டம்

தாமிரவருணி புஷ்கர விழா அறிமுகக் கூட்டம், திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தாமிரவருணி புஷ்கர விழா அறிமுகக் கூட்டம், திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள சங்கீத சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரசன் ஏ.நடேசன் தலைமை வகித்தார். அகில பாரத பிராமண சங்க தேசிய தலைவர் டி.பி.குளத்துமணி முன்னிலை வகித்தார். சாரதா கல்லூரி நிர்வாகி பக்தானந்த மகராஜ், ராகவானந்த சுவாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். "தரணி செழிக்கும் தாமிரபரணியே' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடல் குறுந்தகட்டை மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட, மருத்துவர் பத்ரிநாராயணன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் பரத்வாஜ் சிறப்புப் பாடல் பாடினார்.
விழா குறித்து நிர்வாகிகள் கூறியது: 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 ராசிகளில் 12 நாள்கள் குரு பகவான் அமர்ந்து அனுக்கிரகம் செய்கிறார். நிகழாண்டில் விருச்சிக ராசியான தாமிரவருணியில் பிரவேசிக்கிறார். இந்த நாள்களில் தாமிரவருணியில் நீராடுவதால், லட்சம் முறை காயத்ரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தாமிரவருணி நதிக்கரையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன. அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 சிவலிங்க தலங்கள் நவகைலாயம் எனவும், 9 பெருமாள் தலங்கள் நவதிருப்பதி எனவும் அழைக்கப்படுகின்றன. 130 கி.மீ. தொலைவு பாய்ந்தோடும் தாமிரவருணியில் 6 துணை நதிகள் வேவ்வெறு பகுதிகளில் உற்பத்தியாகி கலக்கின்றன. 8 அணைக்கட்டுகள், 11 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கும், விவசாயத்திற்கும் நீர் கிடைத்து வருகிறது. புஷ்கர விழாவையொட்டி தாமிரவருணியின் பெருமைகளை உலகறியச் செய்ய ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். நதியை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் உதவ வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், பாஜக நிர்வாகிகள் சுரேஷ், மகாராஜன், இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →