"நீர்வழிப்பாதை திட்டத்திற்காக தாமிரவருணியில் விரைவில் ஆய்வு'
தேசிய நீர்வழிப்பாதை திட்டத்திற்காக தாமிரவருணியில் விரைவில் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலி"நீர்வழிப்பாதை திட்டத்திற்காக தாமிரவருணியில் விரைவில் ஆய்வு'
தேசிய நீர்வழிப்பாதை திட்டத்திற்காக தாமிரவருணியில் விரைவில் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தேசிய நீர்வழிப்பாதை திட்டத்திற்காக தாமிரவருணியில் விரைவில் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாமிரவருணி புஷ்கர விழா அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியது: தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாகத் திகழும் தாமிரவருணி அன்னையின் மடியில் பிறந்திருப்பது மகிழ்ச்சியானது. இன்றைய சூழலில் தாமிரவருணி அன்னையைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு காரணமும் நாம்தான் என்பது வேதனையளிக்கிறது. இந்த நதியை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். கங்கை நதியை தூய்மைப்படுத்தியதைப் போல தாமிரவருணியை தூய்மைப்படுத்த மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரியைத் தொடர்ந்து தாமிரவருணியில் நிகழாண்டில் புஷ்கர விழா நடைபெறுவது சிறப்பானது. 144 ஆண்டுகளுக்கு பின்பு புஷ்கர விழா வருகிறது. இதனை சிறப்பாக நடத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கங்கை-காவிரியை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவரது வழியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 5 பாதைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு 106 நதிகள் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தாமிரவருணி நதியும் அதில் ஒன்றாகும். இத் திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை அரசியலாக்கிவிட்டனர். தமிழர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளனர். இவ் விஷயத்தில் நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தின் நியாயத்தைப் புரிந்து உரிமைகள் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படும். தேசிய அளவில் பல்வேறு கட்சிகள் இணைந்து புதிய அணி உருவாவது என்பது மூன்றாமிடத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதாகவே இருக்கும் என்றார் அவர்.