முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாட்டம் நாராயண சுவாமி கோயில் திருவிழா

மேலப்பாட்டத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தனக்குடம் எடுத்து வந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மேலப்பாட்டத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தனக்குடம் எடுத்து வந்தனர்.
இக்கோயில் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை அய்யா சப்பரப் பவனி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் இருந்து சந்தனக் குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.
இதையடுத்து நண்பகலில் உச்சி படிப்பு, அன்ன தருமம் நடைபெற்றன. மாலையில் பால் அன்னம் வைத்தல், இரவு அன்னதானம், தருமம் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து அய்யாவின் அவதாரச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை (ஏப்.30) அதிகாலை 3 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →