முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது.

Updated On : 13 மார்ச், 2026 at 9:19 PM
என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு.
பகிர்:

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி குறித்து மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் தனியார் ஹோட்டலில் முதுல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொருப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் லஷ்மி நாராயணன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, எங்களது தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் கூட்டணி தொடர்பாக ஆலோசனைக் நடத்தினோம்.

Advertisement

கடந்த தேர்தலில் பாஜக, என்.ஆர்காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்த முறையும் நிற்கும். இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்களும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் நிற்கும். எந்த தொகுதிகளில் யார் நிற்பது என பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் என்ன கூட்டணி உள்ளதோ, அதே கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும் என்றும், அதிமுக கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்த முறையும் அவர்களுடன் பேசி எத்தனை தொகுதி என்று ஒதுக்கப்படும் எனக் கூறினார்.

summary

The seat-sharing agreement between N.R. Congress and BJP for the Puducherry Assembly election has been finalized.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.