முகப்பு
திருநெல்வேலி

சிஐடியூ தொழிற்சங்க கூட்டம்

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வின்சென்ட் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், துணைப் பொதுச்செயலர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். "ஊதிய ஒப்பந்தமும்-நமது முயற்சியும், முன்னேற்றமும்' என்ற தலைப்பில் சம்மேளன பொதுச் செயலர் கே.ஆறுமுகநயினார் பேசினார்.
கூட்டத்தில், "வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கேரள அரசைப் போல ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சி.மணி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →